ADDED : செப் 15, 2024 03:01 AM
நாமக்கல்: மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்-படும், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்களின் குறைதீர்க்கும், 'பணியாளர் நாள்' கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்தார்.
இந்த குறைதீர் நாளில், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், 34 கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.அந்த மனுக்கள் இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்-ளப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் தீர்வு காணப்படும். மேலும், மனுக்கள் குறித்த நிலையை, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என மண்டல இணைப்பதிவாளர் அருளரசு கூறினார். சரக இணைப்பதிவாளர்கள், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொதுமேலாளர், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.