/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாம்பு கடித்து கல்லுாரி மாணவி பலி
/
பாம்பு கடித்து கல்லுாரி மாணவி பலி
ADDED : செப் 08, 2024 01:14 AM
பாம்பு கடித்து கல்லுாரி மாணவி பலி
எருமப்பட்டி, செப். 8-
எருமப்பட்டி, பொட்டிரெட்டிப் பட்டியை சேர்ந்தவர் நந்தினி. இவர், நாமக்கல் ராமலிங்கம் மகளிர் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று, விநாயகர் சதுர்த்தியையொட்டி கல்லுாரி விடுமுறை என்பதால், பொன்னேரியில் உள்ள அவரது பெரியம்மா ஜெயக்கொடியின் பூந்தோட்டத்திற்கு பூ பறிக்க சென்றார். அப்போது, செடிகளில் படுத்திருந்த பாம்பு இருப்பது தெரியாமல், நந்தினி மிதித்துள்ளார். அப்போது பாம்பு அவரை கடித்தது. சிறிது நேரத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, எரு மப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின், நாமக்கல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நந்தினி உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.