ADDED : செப் 03, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது எனக்கூறி, நேற்று முன்தினம், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, குமாரபாளையம் தாசில்தார் சிவகுமார், பேச்சுவார்த்தை நடத்தி, 15 நாளில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதை தொடர்ந்து, வருவாய்த்துறை, நீர் வளத்துறை, மின்வா-ரியம், பள்ளிப்பாளையம் யூனியன், மற்றும் பஞ்., அதிகாரிகள் உள்ளடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கைப்படி, நடவடிக்கை இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.