/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரத்தில் பருத்தி ஏலம் ரூ.4 லட்சத்திற்கு விற்பனை
/
ராசிபுரத்தில் பருத்தி ஏலம் ரூ.4 லட்சத்திற்கு விற்பனை
ராசிபுரத்தில் பருத்தி ஏலம் ரூ.4 லட்சத்திற்கு விற்பனை
ராசிபுரத்தில் பருத்தி ஏலம் ரூ.4 லட்சத்திற்கு விற்பனை
ADDED : ஆக 23, 2024 01:30 AM
ராசிபுரம், ஆக. 23-
ராசிபுரத்தில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆர்.சி.எம்.எஸ்., என்ற பெயரில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மண்ணெண்ணெய் பங்க், காஸ் ஏஜென்சீஸ், கூட்டுறவு வங்கி, மஞ்சள் ஏலம், பருத்தி ஏலம் ஆகியவற்றை நடத்தி வருகிறது. வாரத்தில் செவ்வாய்கிழமை தோறும் நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடத்துகிறது. அதேபோல் வெண்ணந்துார் அக்கரைப்பட்டியில் திங்கட்கிழமையும், ராசிபுரம் கவுண்டம்பாளையத்தில் வியாழக்கிழமையில் பருத்தி ஏலமும் நடத்தி வருகிறது.
நேற்று ராசிபுரம் கவுண்டம்பாளையத்தில் நடந்த பருத்தி ஏலத்தில், சுரபி ரகம் மூட்டை குறைந்தபட்சமாக, 7,619 ரூபாய் அதிகபட்சமாக, 8,445 ரூபாய், ஆர்.சி.எச். பருத்தி குறைந்தபட்சமாக, 6,909 ரூபாய், அதிகப்பட்சமாக, 7,611 ரூபாய்க்கும் விற்பனையானது. கொட்டு ரகம் குறைந்தபட்சம், 3,865 முதல், 4,219 ரூபாய் வரை விற்றது. ஆர்.சி.எச்., 156 மூட்டை, சுரபி, 25 மூட்டை, கொட்டு, 6 மூட்டை என மொத்தம், 187 மூட்டை பருத்தி, நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

