/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெள்ளப்பெருக்கு பாதிப்பு கணக்கெடுப்பு குளறுபடியின்றி நடத்த கவுன்சிலர்கள் கோரிக்கை
/
வெள்ளப்பெருக்கு பாதிப்பு கணக்கெடுப்பு குளறுபடியின்றி நடத்த கவுன்சிலர்கள் கோரிக்கை
வெள்ளப்பெருக்கு பாதிப்பு கணக்கெடுப்பு குளறுபடியின்றி நடத்த கவுன்சிலர்கள் கோரிக்கை
வெள்ளப்பெருக்கு பாதிப்பு கணக்கெடுப்பு குளறுபடியின்றி நடத்த கவுன்சிலர்கள் கோரிக்கை
ADDED : ஆக 02, 2024 03:48 AM
பள்ளிப்பாளையம்: ''வெள்ளப்பெருக்கு பாதிப்பு குறித்து அதிகாரிகள் குளறுபடி-யின்றி சரியாக எடுக்க வேண்டும்,'' என, பள்ளிப்பாளையம் நகர்-மன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.
பள்ளிப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம், மன்ற அரங்கில் நேற்று நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில், துணைத்த-லைவர் பாலமுருகன் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
சம்பூரணம், அ.தி.மு.க.,: கடந்த முறை ஆற்றில் ஏற்பட்ட வெள்-ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பலருக்கு, நிவாரணம் வழங்க-வில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பு குளறுபடியால் இது நடந்துள்ளது. தற்போது சரியாக அதிகாரிகள் கணக்கெடுக்க வேண்டும்.
செந்தில், அ.தி.மு.க.,: மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுவ-தற்கும், குறைகள், பிரச்னைகளை தெரிவிப்பதற்கும் போதிய நேரம் வேண்டும். ஐந்து நிமிடத்தில் என்ன பேச முடியும். நக-ராட்சி முழுதும் நாய் தொல்லை அதிகரித்துள்ளது.
சுஜாதா, அ.தி.மு.க.,: எனது வார்டில் குடிநீர் பணி கடந்த, 6 மாத-மாக பாதியில் உள்ளது. பலமுறை அதிகாரிகள், பணியாளர்க-ளிடம் தெரிவித்தும் நடக்கவில்லை.
சுசீலா, அ.தி.மு.க.,: தண்ணீர் பிரச்னை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது வார்டு மக்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
சிவம், ம.தி.மு.க.,: ஆற்றோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களை மாற்று இடத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
செல்வராஜ், நகராட்சி தலைவர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட-வர்கள் குறித்து கணக்கெடுப்பு சரியான முறையில் நடக்கும், எந்த குளறுபடியும் நடக்காது. 10 கோடி ரூபாயில் குடியிருப்பு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
மன்ற கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். நாய் தொல்லை கட்டுப்படுத்தவும், ஆற்றோர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.