/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஞ்., செயலாளர்களை தமிழக அரசின் பென்சன் திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 22, 2024 01:52 AM
நாமக்கல், ஆக. 22-
பஞ்., செயலாளர்களை, தமிழக அரசின் பென்சன் திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி, நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்., துறையின் ஆணிவேராய் பஞ்., செயலாளர்கள், பதிவுறு எழுத்தர் நிலையில், 15,900 - 50,400 ரூபாய் ஊதிய விகிதத்தில் காலமுறை ஊதிய கட்டிற்கு, 2018ல் அரசாணை மூலம் கொண்டுவரப்பட்டனர். ஆனால், தற்போதுவரை பஞ்., செயலாளர்கள், தமிழக அரசின் பென்சன் திட்டத்தில் இணைக்கவில்லை. தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க பல்வேறு மனுக்கள் கொடுத்தும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, பஞ்., செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு பஞ்., செயலாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
பொருளாளர் துரைசாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் பொன்னுவேல், மாநில இணை செயலாளர் பச்சமுத்து, செயற்குழு உறுப்பினர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பஞ்., செயலாளர்களை, தமிழக அரசின் பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சங்க மாவட்ட மகளிரணி செயலாளர் சங்கீதா, மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.