/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வறட்சியால் குறையும் நிலத்தடி நீர்மட்டம்
/
வறட்சியால் குறையும் நிலத்தடி நீர்மட்டம்
ADDED : மே 04, 2024 07:03 AM
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் நகராட்சி, பள்ளிப்பாளையம் யூனியனில், 15 பஞ்சாயத்துகள், ஆலாம்பாளையம், படவீடு டவுன் பஞ்.,கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறங்களை உள்ளடக்கி உள்ளது. பொதுமக்களுக்கு நீராதாரமாக காவிரி ஆறும், நிலத்தடி நீரும் விளங்கி வருகிறது. கடந்த, 5 மாதங்களாக மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. மேலும், ஆற்றில் தண்ணீர் வரத்தும் குறைந்து விட்டது.
கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பல இடங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறையாக உள்ளது. ஆற்று தண்ணீரும் தேவையானளவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு போதுமானளவு தண்ணீர் வழங்க முடியாததால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் விரைவில் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும்.
எனவே, பற்றாக்குறை நிலவும் பகுதியில் மாற்று ஏற்பாடு செய்திடவும், தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.