/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மொட்டை அடிக்க ரூ.150 வசூலால் பக்தர்கள் அதிர்ச்சி
/
மொட்டை அடிக்க ரூ.150 வசூலால் பக்தர்கள் அதிர்ச்சி
ADDED : மே 02, 2024 02:21 AM

ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் புது மாரியம்மன் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு சித்திரை திருவிழா கடந்த ஏப்., 22ல் துவங்கியது. நேற்று பக்தர்கள் மொட்டை அடித்து, அலகு குத்தி, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது மொட்டை அடிக்க, பக்தர்களிடம், 150 ரூபாய் பெற்றுக்கொண்டு, 'டோக்கன்' வழங்கினர். மேலும் மொட்டை அடிக்கும் இடத்தில், தொழிலாளர்கள், 100 ரூபாய் வசூலித்தனர். இதுமட்டுமின்றி ஆடு, கோழி பலி கொடுக்க, 50 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.
இது தவிர, கோவிலில் ஏற்கனவே, அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே, தனி நபர்களால் தற்போது புதிதாக உண்டியல் வைக்கப்பட்டு, பக்தர்களிடம் காணிக்கை வசூலிக்கப்பட்டது.
செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் கூறுகையில், ''அறநிலையத்துறை கோவில்களில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

