/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் திருவிழாவில் தேர் சங்கிலி துண்டானதால் பக்தர்கள் அதிர்ச்சி
/
கோவில் திருவிழாவில் தேர் சங்கிலி துண்டானதால் பக்தர்கள் அதிர்ச்சி
கோவில் திருவிழாவில் தேர் சங்கிலி துண்டானதால் பக்தர்கள் அதிர்ச்சி
கோவில் திருவிழாவில் தேர் சங்கிலி துண்டானதால் பக்தர்கள் அதிர்ச்சி
ADDED : ஏப் 11, 2024 07:39 AM
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை அருகே, துலுக்க சூடாமணியம்மன் கோவில் திருவிழாவில், தேர் இழுத்து செல்லும் போது சங்கிலி துண்டானதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனியில் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இரண்டு வாரங்களுக்கு முன் கம்பம் நடுதலுடன் தேர்த்திருவிழா துவங்கியது. அன்று முதல் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா, நேற்று காலை தொடங்கியது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனப்பிரியா, அறங்காவலர் குழுத்தலைவர் ரங்கசாமி, டி.எஸ்.பி., விஜயகுமார் உள்ளிட்டோர், தேர்வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
ஊர்வலம் தொடங்கிய சில நிமிடத்திலேயே, வீதியின் ஓரத்திற்கு தேர் சென்றது. இதனால், பக்தர்கள் சங்கிலியை பிடித்து இழுத்து, தேரை நிறுத்த முயன்றனர். அப்போது, இடது பக்க சங்கிலி துண்டானதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பின், பொக்லைன் இயந்திர உதவியுடன் தேரை சரியான பாதைக்கு நிலை நிறுத்தி துண்டான சங்கிலிக்கு, 'வெல்டிங்' வைத்து சரி செய்யப்பட்டது. இதனால், இரண்டு மணி நேரம் கழித்து தேர் ஊர்வலம் தொடங்கியதால் பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.

