/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 11, 2024 11:31 AM
தர்மபுரி: மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2023-24ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்று மற்றும் அதிக மதிப்பெண்களுடன் சாதனை படைத்துள்ளனர்.
மாணவி கோபிகா, 498 மதிப்பெண், சர்வேஷ், 497, திவித், 496, லட்சுமிராஜன், 496, ஜெய்ஸ்ரீ, 496, விஷால், 496, சத்திய பிரியா, 496 மதிப்பெண்கள் பெற்றனர். இதில், 3 - பாடப்பிரிவுகளில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள்-, 11 பேர், இரண்டு பாடப்பிரிவுகளில், 100-க்கு 100 மதிப்பெண் பெற்று மாணவர்கள், 42 பேர் சாதனை புரிந்துள்ளனர்.
கணிதத்தில், 148 மாணவர்கள், அறிவியல், 96 மாணவர்கள், சமூக அறிவியல், 27 மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். 495/500 - மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள்- 15 பேர், 490/500 -மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள்,- 71 பேர், 480/500 -மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள்,- 201 பேர், 470/500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள்,- 330 பேர், பள்ளியின் சராசரி மதிப்பெண் 435/500 மற்றும் சராசரி விழுக்காடு 87 சதவீதம் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகள் அனைவரையும் பள்ளி தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், உதவி தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர். டாக்டர்.ராம்குமார், இயக்குனர்கள் ஷ்ரவந்தி தீபக், டாக்டர்.திவ்யா ராம்குமார் மற்றும் முதல்வர்கள், இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.