/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஈரோட்டில் தி.மு.க., பொதுக்கூட்டம் நிர்வாகிகளுக்கு மா.செ., அழைப்பு
/
ஈரோட்டில் தி.மு.க., பொதுக்கூட்டம் நிர்வாகிகளுக்கு மா.செ., அழைப்பு
ஈரோட்டில் தி.மு.க., பொதுக்கூட்டம் நிர்வாகிகளுக்கு மா.செ., அழைப்பு
ஈரோட்டில் தி.மு.க., பொதுக்கூட்டம் நிர்வாகிகளுக்கு மா.செ., அழைப்பு
ADDED : மார் 30, 2024 02:02 AM
நாமக்கல்:'நாமக்கல்
லோக்சபா தொகுதி, 'இண்டியா' கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை
ஆதரித்து, நாளை ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர்
ஸ்டாலின் பேசுகிறார்' என, கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர்
ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல்
லோக்சபா தொகுதி, 'இண்டியா' கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை
ஆதரித்து, ஈரோடு மாவட்டம், முத்துர் சாலை, சின்னியம்பாளையம் பஸ்
நிறுத்தம் அருகே, நாளை மாலை, 5:00 மணிக்கு, தேர்தல் பொதுக்கூட்டம்
நடக்கிறது. அதில், தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்
பங்கேற்று பேசுகிறார். இத்தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு, 'இண்டியா'
கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சி, தி.மு.க., நிர்வாகிகள்,
செயல்வீரர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.