ADDED : செப் 03, 2024 04:27 AM
நாமக்கல்: நாமக்கல் சிலுவம்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பன், 80. இவர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று கறுப்பு கொடியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அரசு உத்தரவுப்-படி, அனைத்து வி.ஏ.ஓ.,க்களும், தங்கள் அலுவலகத்தில், பணி நேரங்களில், காலை, 10:00 முதல், மாலை, 5:54 மணி வரை, பணியில் இருக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலர்களும் அடையாள அட்டையை, மக்கள் பார்வைக்கு தெரியும் வகையில் பயன்படுத்த வேண்டும்.
அலுவலக நேரங்களில், அலுவலகத்திற்கு சம்பந்தம் இல்லாத வகையில் மொபைல் போன்கள் மூலம் மக்களின் பார்வை நேரத்தை வீணடிக்க கூடாது. அலுவலக நேரங்களில், இருக்-கையில் இல்லாத நேரங்களில், மின் விசிறி வீணாக ஓடிக்கொண்-டிருப்பதை தவிர்க்க வேண்டும். வி.ஏ.ஓ., முதல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும். பொதுமக்-களின் கேள்விக்கு உண்மையான பதிலை வெளிப்படையாக தெரி-விக்க வேண்டும் என்பன உள்பட, 8 அம்ச கோரிக்கையை வலியு-றுத்தினார்.