/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஈ.வெ.ரா., சிலையை ஒட்டி கழிவுநீர் பாய்ந்தோடும் அவலம்
/
ஈ.வெ.ரா., சிலையை ஒட்டி கழிவுநீர் பாய்ந்தோடும் அவலம்
ஈ.வெ.ரா., சிலையை ஒட்டி கழிவுநீர் பாய்ந்தோடும் அவலம்
ஈ.வெ.ரா., சிலையை ஒட்டி கழிவுநீர் பாய்ந்தோடும் அவலம்
ADDED : ஆக 20, 2024 03:08 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட் முன், ஈ.வெ.ரா., சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ஒட்டியபடி, சாக்கடை கழிவுநீர் பாய்ந்தோடி பெரிய கால்வாயில் கலக்கிறது. மேலும், சாக்கடை மட்டுமின்றி, குப்பைகளையும் அதில் போட்டு விடுகின்றனர். இதனால், சாக்கடை கழிவுநீர் எளிதாக செல்ல முடியாமல் அடைத்துக்கொண்டு அங்கு பரவி கிடக்கிறது.
இதன் காரணமாக, ஈ.வெ.ரா., பிறந்தநாள், நினைவு நாள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின் போது, சிலைக்கு மாலை அணிவிக்க முடியாமல், கட்சியினர் தவிக்கின்றனர். அப்படியே சென்றாலும் ஒருவர் அல்லது இருவர் மட்டும் தான் சிலை அருகே செல்ல முடியும். சாக்கடை இருப்பதால் அனைவரும் செல்ல முடிவதில்லை. மேலும், பஸ் ஸ்டாண்ட் அருகே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் சாக்கடையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.