sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் நீர்நிலைகளை கண்டு கொள்ளாத அதிகாரிகள்

/

நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் நீர்நிலைகளை கண்டு கொள்ளாத அதிகாரிகள்

நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் நீர்நிலைகளை கண்டு கொள்ளாத அதிகாரிகள்

நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் நீர்நிலைகளை கண்டு கொள்ளாத அதிகாரிகள்


ADDED : ஆக 09, 2024 03:35 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், பள்ளிப்பாளையம் பகுதி விவசாயிகள் நெல் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். ஆனால், பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள நீர்நிலைகள் பராமரிப்பு இல்லாமல், முட்புதர்க-ளாக காட்சியளிக்கிறது. அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து, மேட்டூர் கிழக்குகரை வாய்க்-காலில் ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆகஸ்டு மாதம் திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை வந்து கொண்டிருக்கும். இதை பயன்படுத்தி சேலம், நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுவர்.

பள்ளிப்பாளையத்தில் சமயசங்கிலி, களியனூர், எளையாம்பா-ளையம், மோளகவுண்டம்பாளையம், மாம்பாளையம், எலந்த-குட்டை, தெற்குபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி, 10 ஆயிரத்திற்கும் மேற்-பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும்.

இந்தாண்டு பாசனத்திற்கு கடந்த, 30ல், வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிப்பாளையம் பகுதி விவசா-யிகள் நெல் சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர்.

இது குறித்து மோளகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் கூறுகையில், ''கடந்தாண்டு பாசனத்-திற்கு தண்ணீர் திறக்க வில்லை. இந்தாண்டு பாசனத்திற்கு தண்ணீர் வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் நெல் சாகு-படி துவக்கப்படும்,'' என்றார்.

கண்டு கொள்ளாத அதிகாரிகள்

பள்ளிப்பாளையம் பகுதியில் எளையாம்பாளையம், சில்லாங்-காடு, மோளகவுண்டம்பாளையம், மாம்பாளையம், எலந்த-குட்டை உள்ளிட்ட பல பகுதியில் ஏரி, நீர்தேக்கம், தடுப்பணை போன்ற நீர்நிலைகள் உள்ளன.

மழை பெய்தால் இந்த நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து சேரும், நீர்நிலைகளில் தண்ணீர் இருந்தால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து காணப்படும். இதை பயன்படுத்தி விவசா-யிகள் தானியங்கள், காய்கறிகள், தீவனங்கள் சாகுபடி செய்வர்.

தற்போது பருவமழை பெய்து நீர் காவிரியில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. ஆனால், பெரும்பாலான நீர்நிலைகள் பராமரிப்பு இல்லாமல் முட்புதர்களாக காட்சியளிக்கிறது. குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு கொட்டப்பட்டு உள்ளன. அதிகா-ரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

தற்போது மழை காலம் என்பதால், நீர்நிலைகளை பாதுகாக்க தேவையான நிதி ஒதுக்கி பராமரிப்பு செய்து, மழை நீர் முழுமை-யாக சேமிக்கும் வகையில், மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீணாகும் பாசன நீர்

பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் 10 கி.மீ., சுற்றளவுக்கு வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலில் வரும் தண்ணீரை பாசனத்-திற்கு, பிரதான வாய்க்காலில் இருந்து மதகு வழியாக கிளை வாய்க்கால் மூலம் வயல்வெளிகளின் கடைமடைக்கு தண்ணீர் செல்கிறது.

இதில், ஆசிரியர்காலனி பகுதியில் வாய்க்காலில் அடைப்பு உள்-ளதால், தண்ணீர் சீராக செல்லாமல், வீணாகி சாலையில் செல்கி-றது.

இதனால் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விவசாயிகள் அதிருப்தியில் உள்-ளனர்.






      Dinamalar
      Follow us