/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மானியத்தில் மக்காச்சோள விதை வழங்க விவசாயிகள் கோரிக்கை
/
மானியத்தில் மக்காச்சோள விதை வழங்க விவசாயிகள் கோரிக்கை
மானியத்தில் மக்காச்சோள விதை வழங்க விவசாயிகள் கோரிக்கை
மானியத்தில் மக்காச்சோள விதை வழங்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஆக 11, 2024 02:28 AM
சேந்தமங்கலம்;நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் மரவள்ளி பயிரிடப்பட்டு வந்தது.
இந்த மரவள்ளி செடிகளில், சில ஆண்டுகளுக்கு முன் நோய் தாக்கம் ஏற்பட்டதால் முள்வேலி மரவள்ளி கிழங்குகள் எடை குறைவு நோயினால் பாதிக்கப்பட்டன. இதனால், கடந்தாண்டு ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்தாண்டு போதிய மழையில்லாததால் சித்திரை, வைகாசி மாத பட்டத்தில் மரவள்ளி பயிரிட வேண்டிய விவசாயிகள் பயிரிடாமல் தற்போது மக்காச்சோளம் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த மாதத்தில் ஓரளவு நல்ல மழை பெய்துள்ளதால், நாமக்கல், எருமப்பட்டி, வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.