/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நக்கையாற்றில் வெள்ளம் விவசாயிகள் மகிழ்ச்சி
/
நக்கையாற்றில் வெள்ளம் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 30, 2024 01:28 AM
விவசாயிகள் மகிழ்ச்சி
சேந்தமங்கலம், ஆக. 30-
கொல்லிமலையில் பெய்து வரும் கனமழையால், அடிவாரத்தில் உள்ள காரவள்ளி நக்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொல்லிமலையில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள நீர்வழி ஓடைகள், காட்டாறுகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொல்லிமலையின் மேற்கு பகுதியில் பெய்த கன மழையால், மலையில் இருந்து புதிய அருவிகள் உருவாகி தண்ணீர் காரவள்ளி பகுதிகளில் உள்ள ஓடைகளுக்கு வந்து கொண்டுள்ளது.
இதேபோல், காரவள்ளி சோதனை சாவடி பின்புறத்தில் உள்ள பாலம் வழியாக, நக்கை ஆற்றிற்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த தண்ணீர் காரவள்ளி வழியாக அடிவாரம் பகுதிகளில் கருவாட்டாறில் கலக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.

