/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுகாதாரமற்ற பானிபூரி பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
/
சுகாதாரமற்ற பானிபூரி பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
சுகாதாரமற்ற பானிபூரி பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
சுகாதாரமற்ற பானிபூரி பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
ADDED : ஜூலை 06, 2024 08:13 AM
நாமக்கல்: கர்நாடகா மாநிலத்தில், பானிபூரியில் கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலந்திருப்பதாக, ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, தமிழகத்தில் பானிபூரி விற்பனை மற்றும் தயார் செய்யும் இடங்களில், உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, நாமக்கல் நகரம் மற்றும் தாலுகா பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர், பானிபூரி விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பானிபூரி, காலிபிளவர் சில்லி என, ஐந்து கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நான்கு கடைகளுக்கு, தலா, 1,000 ரூபாய் வீதம், மொத்தம், 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.