நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் அடுத்த வள்ளிபுரம் அசோக் லேலண்ட் நிறுவனத்தில், ஆஸ்டர் அறக்கட்டளை மற்றும் ஹீல்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில், மருத்துவ முகாம், மருத்துவ ஊர்தி துவக்க விழா நடந்தது.
இந்த மருத்துவ ஊர்தி, மாவட்டம் முழுதும் உள்ள கிராமப்புறங்களுக்கு சென்று, மருத்துவ முகாம் நடத்தி, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் அனைத்து நோய் சம்பந்தப்பட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், நோய் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.