/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முழு நேர மேலாண் பட்டய பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
/
முழு நேர மேலாண் பட்டய பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
முழு நேர மேலாண் பட்டய பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
முழு நேர மேலாண் பட்டய பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 16, 2024 12:46 PM
நாமக்கல்: 'முழுநேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு, வரும் ஜூலை, 19க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தில், 2024-25ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் www.tncu.tn.gov.in என்ற இணையதளவழி மூலம் மட்டுமே, வரும் ஜூலை, 19 மாலை, 5:00 மணி வரை, கட்டணம், 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரும் ஆக., 1ல், குறைந்தபட்சம், 17 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
முழுநேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சியின் பயிற்சி காலம், 12 மாதம். இரண்டு பருவ முறைகளாக தமிழ் வழியில் மட்டும் கற்பிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணம், 18,750 ரூபாய். பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் சுயஒப்பமிட்டு, நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டை மூலமோ அனுப்ப வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு, www.tncu.tn.gov.in என்ற இணையதள வழியிலோ அல்லது 'நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையம், 796, சேலம் பிரதான சாலை (மயில்வாகனம் காம்ப்ளக்ஸ்), முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில், நாமக்கல்--636001' என்ற முகவரியிலோ அல்லது 04286 -290908, 90808 38008 என்ற தொலைபேசி, மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.