/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., நிர்வாகிகளுக்கு தங்க காசு பரிசு
/
தி.மு.க., நிர்வாகிகளுக்கு தங்க காசு பரிசு
ADDED : ஜூன் 24, 2024 03:12 AM
நாமக்கல்;லோக்சபா தேர்தலில், அதிக ஓட்டுகள் பெற்று தந்த நிர்வாகிகளுக்கு, தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.
கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., லோக்சபா தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்து பேசினார். கூட்டத்தில், நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மாதேஸ்வரனை, நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட, நாமக்கல் சட்டசபை தொகுதியில், 79,263 ஓட்டுகள், சேந்தமங்கலத்தில் 82,335, ராசிபுரத்தில் 76,596 என மொத்தம், 2 லட்சத்து, 38,194 ஓட்டுகள் பெற்று, 27,619 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முன்னதாக, லோக்சபா தேர்தலில், அதிக ஓட்டுகள் பெற்று தந்த நிர்வாகிகளுக்கு, தங்ககாசு பரிசாக வழங்கப்பட்டது.
நகர செயலாளர்கள் பூபதி, சிவக்குமார், ராணா ஆனந்த், சங்கர், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆனந்த்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.