/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி மாணவர்கள் தடகள போட்டியில் சாதனை
/
அரசு பள்ளி மாணவர்கள் தடகள போட்டியில் சாதனை
ADDED : செப் 03, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: மோகனுார் குறுவட்ட அளவிலான தடகள போட்டி, அணியாபுரம் அரசு பள்ளியில் நடந்தது. இதில், வளையப்பட்டி அரசு பள்ளி மாணவர் செந்தில்குமார், 17 வயதுக்குட்பட்டோர் தடகள தனி நபர் பிரிவில், 3,000 மீ., 1,500 மீ., 800 மீ., பிரிவில் முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார்.
இதேபோல், மாணவியர் பிரிவில் லோஷினி, 100 மீ., 200 மீ., தடை தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களை, தலைமை ஆசிரியர் மகேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.