/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுாரில் போதை மாத்திரை விற்ற 6 பேர் மீது 'குண்டாஸ்'
/
ப.வேலுாரில் போதை மாத்திரை விற்ற 6 பேர் மீது 'குண்டாஸ்'
ப.வேலுாரில் போதை மாத்திரை விற்ற 6 பேர் மீது 'குண்டாஸ்'
ப.வேலுாரில் போதை மாத்திரை விற்ற 6 பேர் மீது 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 14, 2024 03:00 AM
ப.வேலுார்:ப.வேலுாரில், போதை மாத்திரை விற்று கைதான, 6 பேர் மீது, 'குண்டர்' சட்டம் பாய்ந்தது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே பொத்தனுார் காவிரி ஆற்றுப்பகுதியில், கடந்த, மே, 17ல் போதை மாத்திரை விற்ற, கூடச்சேரியை சேர்ந்த சிதம்பரம், 27, தெற்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்த பசுபதி, 24, ப.வேலுாரை சேர்ந்த கார்த்திகேயன், 21, பொத்தனுாரை சேர்ந்த முகமது உசேன், 24, கோகுல்ராஜ், 20, செல்வம், 23, ஆகிய, 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், போலி மருத்துவர் சான்றிதழ்களை தயாரித்து, 'ஆன்லைன்' மூலம் போதை மாத்திரை, ஊசிகளை வாங்கி, ப.வேலுார், பொத்தனுார் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் உமா உத்தரவுப்படி, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் பரிந்துரைப்படி, டி.எஸ்.பி., சங்கீதா மேற்பார்வையில், பரமத்தி கிளை சிறையில் உள்ள, 6 பேரிடமும், 'குண்டர்' சட்டத்தில் கைதான விபரம் குறித்து போலீசார் நோட்டீஸ் வழங்கினர்.