/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்துக்காப்பட்டியில் குருப்பெயர்ச்சி யாகம்
/
முத்துக்காப்பட்டியில் குருப்பெயர்ச்சி யாகம்
ADDED : மே 02, 2024 11:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், முத்துக்காப்பட்டி ரத்தின விநாயகர், விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில், நேற்று மாலை குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி, நடந்த சிறப்பு யாகத்தில் இளநீர், தேங்காய், கனி வகைகள், பட்டு துணி, நவ தானியங்களை கொண்டு விசேஷ பரிஹார பூஜைகள் செய்யப்பட்டன.
மேலும், தம்பதி சமேதராக உள்ள நவகிரக குருவிற்கு முல்லை பூ, கொண்டைக்கடலை, மஞ்சள் நிற வஷ்திரங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

