/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாநகராட்சியின் முதல் கூட்டம் மேயருக்கு செங்கோல் வழங்கிய எம்.பி.,

ADDED : செப் 17, 2024 01:29 AM
நாமக்கல் மாநகராட்சியின் முதல் கூட்டம்
மேயருக்கு செங்கோல் வழங்கிய எம்.பி.,
நாமக்கல், செப். 17-
நாமக்கல் மாநகராட்சியின் முதல் கூட்டத்தில், எம்.பி., ராஜேஸ்குமார், மேயருக்கு வெள்ளி செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த, மார்ச், 15ல் முதல்வர் ஸ்டாலின், நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி நகராட்சிகளை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி உத்தரவிட்டர். தரம் உயர்த்தப்பட்ட நாமக்கல் மாநகராட்சியுடன் வள்ளிபுரம், தொட்டிப்பட்டி, சிலுவம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, காதப்பள்ளி, வீசாணம், மரூர்பட்டி, வேட்டாம்பாடி, ரெட்டிப்பட்டி, வசந்தபுரம், வகுரம்பட்டி, லத்துவாடி ஆகிய, 12 கிராம பஞ்.,கள் இணைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாநகராட்சியாக உதயமானதை அடுத்து, அதற்கான அரசு உத்தரவு நகலை, நகராட்சி தலைவரக இருந்து, தற்போது மேயராக பதவியேற்ற கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோரிடம் வழங்கினார். நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், முதல் கூட்டம், நேற்று நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார், மாநகராட்சி மேயர் கலாநிதிக்கு வெள்ளி செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.