/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சர்வதேச நெகிழி பை இல்லா தினம் பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கல்
/
சர்வதேச நெகிழி பை இல்லா தினம் பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கல்
சர்வதேச நெகிழி பை இல்லா தினம் பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கல்
சர்வதேச நெகிழி பை இல்லா தினம் பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கல்
ADDED : ஜூலை 04, 2024 11:01 AM
நாமக்கல்: சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தையொட்டி, விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆண்டுதோறும், ஜூலை, 3ல் 'சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள மக்கள் சமூகங்கள் மற்றும் வணிகங்கள், பிளாஸ்டிக் பைகளை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை பயன்படுத்துவதற்கும், இந்த சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் ஒரு துாண்டுதலாக செயல்படுகிறது.
சர்வதேச நெகிழி பை இல்லாத தினத்தை முன்னிட்டு, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து, விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப் பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரகுநாதன், டி.எஸ்.பி., ஆனந்தராஜ், ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.