/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மத்திய அரசின் 'சீடு' திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க அழைப்பு
/
மத்திய அரசின் 'சீடு' திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய அரசின் 'சீடு' திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய அரசின் 'சீடு' திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 22, 2024 01:52 AM
நாமக்கல், ஆக. 22-
'மத்திய அரசின், 'சீடு' திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், இணையத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம், சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு, 'சீடு' திட்டம் (ஸ்கீம் பார் எக்கனாமிக் எம்பவர்மென்ட் ஆப் டிஎன்டி) மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கல்விக்கான அதிகாரமளித்தல், சுகாதாரம், வாழ்வாதாரங்களை எளிதாக்குதல், நிலம் மற்றும் வீடு உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள், மத்திய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.