/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கண்ணனுார் மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்
/
கண்ணனுார் மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்
ADDED : மே 10, 2024 02:28 AM
எலச்சிபாளையம்;எலச்சிபாளையத்தில் உள்ள, கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் கடந்த ஏப்., 30 இரவு பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கடந்த, 3ம் தேதி பூவோடு எடுக்கப்பட்டது. 8 ம்தேதி மாலை விளக்கு பூஜை செய்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று காலை பொங்கல் வைத்தல், பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிகரகம் எடுத்தல், கிடாவெட்டுதல், மாவிளக்கு பூஜை, நையாண்டி மேளம், குறவன்குறத்தி ஆட்டம், வாணவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடந்தன.
அம்மன் சிறப்பு தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று கம்பம் மற்றும் கும்பம் விடுதல், மலர் கிணற்றில் விடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் திருவிழா முடிவடைகிறது. தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கண்ணனுார் மாரியம்மன் நண்பர்கள்குழு மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.