/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குறிஞ்சி 'நீட்' அகாடமி மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சாதனை
/
குறிஞ்சி 'நீட்' அகாடமி மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சாதனை
குறிஞ்சி 'நீட்' அகாடமி மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சாதனை
குறிஞ்சி 'நீட்' அகாடமி மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சாதனை
ADDED : ஆக 22, 2024 01:51 AM
நாமக்கல், மருத்துவ படிப்பில், அரசு இட ஒதுக்கீடான, 7.5 சதவீத தரவரிசை பட்டியலில், நாமக்கல் குறிஞ்சி, 'நீட்' அகாடமி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல்லில், குறிஞ்சி, 'நீட்' அகாடமி பயற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படித்து, மருத்துவ படிப்பிற்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியலில், நாமக்கல் குறிஞ்சி, 'நீட்' அகாடமி பயிற்சி மையத்தில் படித்த, திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளி மாணவி அனுஷியா, 665 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும், நாமக்கல் மாவட்ட அரசு பள்ளியில் பயின்ற மாணவன் ரத்தீஷ், 665 மதிப்பெண் பெற்று மாநில அளவில் நான்காம் இடமும் பிடித்தனர்.
மேலும், இப்பயிற்சி மையத்தில் பயின்ற பல மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். அவர்களை, குறிஞ்சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் தங்கவேல் மற்றும் இயக்குனர்கள் பாராட்டினர்.