/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மூன்றாவது மொழி கற்பதுஎங்கள் எதிர்காலத்திற்கு நல்லதுதானேமனம் திறக்கும் மாணவர்கள்
/
மூன்றாவது மொழி கற்பதுஎங்கள் எதிர்காலத்திற்கு நல்லதுதானேமனம் திறக்கும் மாணவர்கள்
மூன்றாவது மொழி கற்பதுஎங்கள் எதிர்காலத்திற்கு நல்லதுதானேமனம் திறக்கும் மாணவர்கள்
மூன்றாவது மொழி கற்பதுஎங்கள் எதிர்காலத்திற்கு நல்லதுதானேமனம் திறக்கும் மாணவர்கள்
ADDED : பிப் 22, 2025 01:43 AM
மூன்றாவது மொழி கற்பதுஎங்கள் எதிர்காலத்திற்கு நல்லதுதானேமனம் திறக்கும் மாணவர்கள்
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு வேறு எந்த மாநிலத்திலும் வராத எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது. புதிய கல்விக்கொள்கையின் படி மாணவர்கள் பள்ளியில் மூன்று மொழியை கற்கவேண்டும். முதலில் தாய்மொழி, அடுத்து ஆங்கிலம், மூன்றாவதாக எந்த மொழியையும் கற்கலாம். ஹிந்தியை தான் கற்க வேண்டும் என்று நிர்பந்தம் இல்லை. ஆனால் ஹிந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தமிழகத்தில் கருத்து பரவுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் காங்., ஆட்சியில் இருந்த போதும் சரி, தற்போது மார்க்சிஸ்ட் ஆட்சியிலும் சரி அங்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் தான் அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாக கேரளா திகழ்கிறது. காங்., ஆளும் கர்நாடகாவிலும் மூன்றாவது மொழியை கற்பிக்கின்றனர். மாணவர்கள் விரும்பி கற்பதை தமிழக அரசியல்வாதிகள் தடுப்பது ஏன், மாணவர்களின் படிப்பில் அரசியல் என்பது தமிழகத்தில் தான் நடக்கிறது. யாருடைய எதிர்காலத்தை வைத்து அரசியல் நடக்கிறதோ... அவர்களிடமே (மாணவர்கள்) மூன்றாவது மொழியை கற்பது குறித்து கேட்டோம்...
நாமக்கல் மாணவர்கள் கூறியதாவது:
அரசியலாக
பார்க்க வேண்டாம்
ரித்ன்யாஸ்ரீ
மத்திய அரசு கொண்டு வரும் தேசிய கல்விக்கொள்கை என்பது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து, தங்களுக்கு பிடித்த பிறமொழியை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதே.
ஒருவர், தங்களுக்கு பிடித்த மூன்றாவது மொழியை தேர்வு செய்து படிப்பதில் எந்த தவறும் இல்லை.
குறிப்பாக, தமிழகத்தில் வாழும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், தமிழ், ஆங்கிலம் மொழியை கற்றுக்கொள்வதுடன், தாய்மொழியையும் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும். அவற்றை அரசியலாக பார்க்க வேண்டாம்.
மாணவ பருவத்தில்
கற்பது எளிது
ஜோகிந்த்
ஒன்று முதல், பத்தாம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தி மொழி எடுத்து படித்தேன். மாணவ பருவத்தில், பிற மொழியை கற்றுக் கொண்டு எளிதாக பேசவும், எழுதவும் முடியும்.
பிற நாடுகளுக்கு செல்லும்போது, அந்நாட்டவர்களின் மொழியை தெரிந்து கொள்வது மிக அவசியம். அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள முடியாது என்றாலும், அடிப்படையாக ஹிந்தி மொழியை கற்றுக்கொள்வது நல்லது.
சி.பி.எஸ்.இ.,
மாணவனான எனக்கு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் பேசவும், எழுதவும் தெரியும். கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்வது தன்னம்பிக்கை, தைரியம் தரும்.
எந்த மாநிலத்துக்கும் செல்லலாம்
அக்ஷத்சிவாத்
ஒவ்வொரு மாணவரும், தங்களது திறமைகளை வளர்த்து கொண்டால் தான், போட்டி நிறைந்த உலகில் வெற்றி பெறமுடியும். மும்மொழிக்கொள்கை என்றாலே, ஹிந்தி தான் படிக்க வேண்டும் என, பலரும் நினைக்கின்றனர்.
தமிழ் தெரிந்த நமக்கு, அண்டை மாநில மொழியான கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்றவற்றை கற்றுக்கொள்ளும்பட்சத்தில், வேலைவாய்ப்பு கிடைத்தால், அந்த மாநிலங்களுக்கு பயமின்றி செல்லலாம்.
மத்திய பல்கலையில் படிக்க உதவும்
பிரசன்னா
மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழி படிக்க வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி. தனியார் பள்ளி மாணவர்கள், அவர்களின் விருப்பம்போல் மொழியை தேர்வு செய்து படிக்கின்றனர். அதுபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் வரவேற்க வேண்டியது தான். மத்திய பல்கலையில் படிக்க மாற்று மொழி மிகவும் உதவியாக இருக்கும்.
ஆங்கிலத்தால் தமிழ் அழியவில்லையே
காஸ்னிகஜல்
ஆங்கிலம், ஹிந்தி ஏதாவது ஒரு மொழி தேவை என்பது தான் யதார்த்தம். அரசியல்வாதிகளின் குழந்தைகள், ஆரம்ப வகுப்பில் இருந்தே ஹிந்தி கற்கின்றனர். ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வேண்டாம் என, அடம் பிடிக்கின்றனர். தாய்மொழி என்பது உணர்வில் உள்ள ஒரு விஷயம். அது எப்போதும் அழியாது. நாம் பேச்சு வாக்கில் டிபன், மீல்ஸ், லைட், புக் என, ஆங்கிலத்தில் தான் குறிப்பிடுகிறோம். அதற்காக தமிழ்மொழி அழிந்து
விடவில்லையே. மூன்றாவது மொழி தேவையான ஒன்று.
கட்டணமில்லாத வாய்ப்பு
சுரேந்திரன்
நான் ஹிந்தி படிக்க தனியாக டியூஷன் சென்றேன். இதில் படிக்க எதுவும் பிரச்னையாக இல்லை. பொருளாதார நெருக்கடியால் என்னால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. கட்டணமில்லாமல் இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து படித்து அதிலும் சான்றிதழ் பெற்றிருப்பேன். எனவே அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாற்று மொழி உதவியாக இருக்கும்
நிஷாமூன்றாவது மொழி படிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் என் தோழிகள் அனைவரும், மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெளி மாநிலங்களில் படிக்க செல்வது மட்டுமின்றி, வேலைக்கு செல்லவும் மாற்று மொழி உதவியாக இருக்கும்.
தொடக்க பள்ளியிலேயே இதுபோன்ற மாற்று மொழிகளை கற்றுக்கொடுக்க அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்.
மாணவர்களுக்கு கடினமில்லைவசந்தகுமார்ஆங்கில மொழியில் தான் நான் கல்வி கற்று வருகிறேன். தமிழில் தெரிவதை விட ஆங்கிலத்தில் நன்றாக கற்றுக்கொள்கிறேன். இதேபோல் வேறு மொழி ஒன்றையும் என்னால் எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.
ஹிந்தி மொழி படித்தால், நாடு முழுவதும், ஆங்கிலம் படித்தால் உலகம் முழுவதும் வேலை பெற்றுத்தரும். இதனால், மூன்று மொழிகளை படிப்பதில் என்னை போன்ற மாணவர்களுக்கு கடினமில்லை.