ADDED : ஆக 19, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தாபாக்களில், டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பதாக புகார் வந்தது. இதையடுத்து, எஸ்.ஐ., மனோகரன் தலைமையில் மதுவி-லக்கு போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாச்சல் அருகே உள்ள தாபாவில் மது விற்றது கண்டு-பிடிக்கப்பட்டது. பதுக்கி வைத்திருந்த, 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், உரிமையாளரான பாச்சல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செட்டி மகன் விஜயகுமார், 44, என்ப-வரை போலீசார் கைது செய்தனர்.

