ADDED : ஜூலை 28, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மின் கட்டணத்தை உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால், சிறுகுறு, நடுத்தர தொழில்கள் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசு மின்கட்-டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு, தமிழ-கத்தில் அமல்படுத்த உள்ள, 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை கைவிட்டு, மாதந்தோறும் மின்கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று மாலை, 6:00 மணிக்கு, மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை மின்-வாரிய அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்-பாட்டம் நடந்தது. எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

