/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அழகு மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபி ேஷக விழா
/
அழகு மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபி ேஷக விழா
ADDED : ஆக 23, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல்லில், அழகு மாரியம்மன் கோவில் மஹா கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது.
நாமக்கல்-மோகனுார் சாலை, பாரதிநகரில் அமைந்துள்ள அழகு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அன்று மாலை விநாயகர் பூஜை, முதல்கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது.
நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 7:45 மணிக்கு புனித கடம் புறப்பாடு, 8:00 மணிக்கு மஹா கும்பாபி ேஷகம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

