/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'9 நிவாரண முகாம்களில் 900க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக உள்ளனர்'
/
'9 நிவாரண முகாம்களில் 900க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக உள்ளனர்'
'9 நிவாரண முகாம்களில் 900க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக உள்ளனர்'
'9 நிவாரண முகாம்களில் 900க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக உள்ளனர்'
ADDED : ஆக 02, 2024 01:44 AM
பள்ளிப்பாளையம், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் ஒன்பது நிவாரண முகாமில், 900க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிப்பாளையம் ஆற்றோரத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை, நேற்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், சிறுபான்மையின நலத்துறை இயக்குனர் ஆசியா மரியம், மாவட்ட கலெக்டர் உமா, ஈரோடு எம்.பி., பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின் கலெக்டர் உமா நிருபர்
களிடம் கூறீயதாவது;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சி காவிரி கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில், 308 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 900க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்பது நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஐந்து மாத கர்ப்பணியும் பாதுகாப்பாக அவரது உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
குமாரபாளையத்தில் உள்ள தரைபாலத்தில், பாதுகாப்பு கருதி தற்காலிகமாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் காடச்சநல்லுார் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளுக்கு இடம் அடையாளம் காணப்பட்டு விரைவில் பட்டா வழங்கப்பட உள்ளது.
ஆசியா வளர்ச்சி வங்கி மூலம், குடியிருப்புகள் கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நிரந்தர வீடு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறினார்.