/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் வழிபாடு
/
முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் வழிபாடு
முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் வழிபாடு
முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் வழிபாடு
ADDED : ஜூலை 08, 2024 07:21 AM
மோகனுார்: மோகனுார், மணப்பள்ளியில் முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு, ராஜகணபதி, செல்வ விநாயகர், கொங்கலம்மன், புக்கிராண்டி நவகிரகங்கள் மற்றும் தோரண வாயில் ஆலய திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பணி முடிந்ததையடுத்து, நேற்று, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, கடந்த, 5ல் மகா கணபதி வழிபாடுடன் துவங்கியது. தொடர்ந்து, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்தனர். அதையடுத்து, முதல் கால வேள்வி, யாகசாலை பிரவேசம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, மகா கணபதி வழிபாட்டுடன் கலச ஆவாகனம், புண்ணியாக வசனம் சன்னவதியாகம், ஸ்பரசாகுதி நிறைவு, மங்கள பூர்ணாகுதி, நடந்தது. தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, ராஜகணபதி, கொங்கலம்மன், புக்கராண்டி, நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
காலை, 7:00 மணிக்கு, செல்வ விநாயகர், தோரண வாயில், தங்க முனியப்பன் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதையடுத்து, மகா அபிஷேகம், சுவாமி தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.