sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குமாரபாளையம் நகராட்சியில் சாதாரண கூட்டம்

/

குமாரபாளையம் நகராட்சியில் சாதாரண கூட்டம்

குமாரபாளையம் நகராட்சியில் சாதாரண கூட்டம்

குமாரபாளையம் நகராட்சியில் சாதாரண கூட்டம்


ADDED : ஆக 02, 2024 03:52 AM

Google News

ADDED : ஆக 02, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சியின், நகர்மன்ற சாதாரண கூட்டம், நக-ராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. நகர்-மன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் நடந்த விவாதங்கள்:

தர்மராஜன், தி.மு.க.,: எங்கள் வார்டில் குப்பையை அள்ளுவதே இல்லை. வடிகாலை முறையாக துார்வாருவதில்லை. கேட்டால் ஆட்கள் இல்லை என்கின்றனர். இதையெல்லாம் சரி செய்யா-விட்டால் வார்டுக்குள் போக முடியாது.

புருஷோத்தமன், அ.தி.மு.க.,: கோம்பு பள்ளம் துார்வார பொக்லைன் இயந்திரம் வேண்டும் என, ஓராண்டாக கேட்டு வரு-கிறேன். ஆனால், பொக்லைன் வந்தபாடில்லை. இதனால், நானே என் சொந்த செலவில், பொக்லைன் இயந்திரத்தை வாட-கைக்கு எடுத்து, துாய்மை பணிகளை மேற்கொண்டேன்.

ராஜ், தி.மு.க.,: நகராட்சி பூங்கா பழையபடி பராமரிப்பது இல்லை. புதர்களாக உள்ளது. வேறு நபரை நியமித்து பராமரிப்பு செய்ய வேண்டும்.

விஜய்கண்ணன், நகராட்சி தலைவர்: கவுன்சிலர்கள் போன் செய்தால் துாய்மைப்பணியாளர்கள் எடுக்காமல் இருந்தால் என்ன அர்த்தம்? கவுன்சிலர்கள் எல்லோரும் சொல்லும் ஒரே புகார் குப்பை பிரச்னை தான். என் வார்டில் கூட குப்பை எடுப்பது இல்லை.

குமரன், நகராட்சி கமிஷனர்: அனைத்து வார்டுகளிலும் குப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us