sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

/

பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்


ADDED : ஆக 24, 2024 07:11 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: பரமத்தி வேலுார் தாலுகா, பொத்தனுாரில் விநாயகர், பகுளா-முகி அம்மன் உடனமர் பசுபதீஸ்வரர், முருகன், காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணி முடிந்ததைய-டுத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த, 21 அதிகாலை, 5:00 மணிக்கு மங்கள இசை-யுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி ஹோமம், தீபாராதனை நடந்தது. அன்று காலை, ப.வேலுார் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடினர். இதைய-டுத்து, ப.வேலுார் ஈஸ்வரன் கோவிலில் இருந்து தீர்த்தக்குட ஊர்-வலம் புறப்பட்டு, பரமத்தி சாலை வழியாக சென்று கோவிலை அடைந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்-தர்கள் பங்கேற்றனர்.

நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை 8:00 மணிக்கு விநாயகர், பகுளாமுகி அம்மன், உடனமர் பசுபதீஸ்வரர், முருகன், காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன-தானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பகுளாமுகி அம்மன் கோவில் அறக்கட்டளை நிர்-வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us