/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொய் தகவலை மக்கள் நம்பவேண்டாம்: பஞ்., தலைவர்
/
பொய் தகவலை மக்கள் நம்பவேண்டாம்: பஞ்., தலைவர்
ADDED : மே 05, 2024 02:26 AM
மல்லசமுத்திரம்,:'மங்களம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை' என, 'வாட்ஸாப்'பில் பொய்யான தகவல் பரவி வருகிறது. இந்த பொய் தகவலை, மக்கள் யாரும் நம்பவேண்டாம் என, பஞ்., தலைவர் குப்பாயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மல்லசமுத்திரம் யூனியன், மங்களம் பஞ்., பெயரை கெடுக்கும் வகையில், சில விஷக்கிருமிகள், 'வாட்ஸாப்' மூலம், 'ஒரு கிராமமே அழியும் நிலை உருவாகியுள்ளது' என, தவறான செய்தியை பரப்பி வருகின்றன. மங்களம் பஞ்.,ல், 13 குக்கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் அடிப்படை வசதியான கழிவுநீர் வடிகால், தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளது.
போர்வெல் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதன் மூலம் தினந்தோறும் பொது மக்களுக்கு, இன்று வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மங்களம் பஞ்., பெயரை கெடுக்கும் வகையில், சில விஷக்கிருமிகள், 'வாட்ஸாப்' மூலம் பொதுமக்களுக்கு தவறான செய்தியை பரப்பி வருகின்றன. பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் என, ஊராட்சி மன்றம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.