/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சூளைமேடு புறம்போக்கு நிலத்தை மீட்க மனு
/
சூளைமேடு புறம்போக்கு நிலத்தை மீட்க மனு
ADDED : ஆக 23, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், ஆக. 23-
மின்னாம்பள்ளி கிராமம், -அண்ணாநகர்,- சூளைமேடு- புறம்போக்கு நிலத்தை, தனிநபர் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, அப்பகுதி மக்கள் நாமக்கல் கலெக்டர் உமாவிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
நாமக்கல் வட்டம், மின்னாம்பள்ளி கிராமம், அண்ணாநகர் சூளைமேட்டில் உள்ள புறம்போக்கு பகுதியை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி உள்ளார். அதனால் எங்கள் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சூளைமேட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ள புறம்போக்கு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

