/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிகிச்சையில் இருந்த போலீஸ் உயிரிழப்பு
/
சிகிச்சையில் இருந்த போலீஸ் உயிரிழப்பு
ADDED : ஆக 17, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை;நாமகிரிப்பேட்டை யூனியன், நாரைக்கினறை சேர்ந்தவர் விக்னேஷ், 31. இவர், பேளுக்குறிச்சி ஸ்டேஷனில், முதல்நிலை போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த, 11 இரவு பணி முடிந்து, டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.சி.எம்.எஸ்., அருகே, ஆத்துார் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில், தலையில் பலத்த காயமடைந்தார். ராசிபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ், நேற்று உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில், டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

