/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மத்திய அரசு திட்டப்பணிகளில் பிரதமர் படம்: பா.ஜ., கோரிக்கை
/
மத்திய அரசு திட்டப்பணிகளில் பிரதமர் படம்: பா.ஜ., கோரிக்கை
மத்திய அரசு திட்டப்பணிகளில் பிரதமர் படம்: பா.ஜ., கோரிக்கை
மத்திய அரசு திட்டப்பணிகளில் பிரதமர் படம்: பா.ஜ., கோரிக்கை
ADDED : செப் 05, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி சார்பில், பெரியார் நகர் பகுதியில், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, கட்டுமான பணி துவக்க விழா, நேற்று நடந்-தது.
இந்த விழாவிற்காக வைக்கப்பட்ட பேனரில், பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெறவில்லை. இதனால், பள்ளிப்பாளையம் நகர, பா.ஜ., தலைவர் லோகேஸ்வரன் தலைமையில் கட்சியினர், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் திரண்டனர். அவர்கள் எம்.பி., பிரகாஷிடம், மத்திய அரசு திட்டப்பணிகளில் மோடி படம் இடம் பெற வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.