ADDED : அக் 24, 2026 05:52 AM
நாமக்கல்:எஸ்.ஐ.ஆர்.,
சட்டத்தை எதிர்த்து, சி.ஐ.டி.யு., - எ.ஐ.கே.எஸ்., - ஏ.ஐ.ஏ.டபில்யூ.யு., -
டி.ஒய்.எப்.ஐ., - எஸ்.எப்.ஐ., உள்ளிட்ட சங்கங்கள் சார்பில், நாமக்கல்
பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர்
அசோகன் தலைமை வகித்தார். செயலாளர் வேலுசாமி கோரிக்கை குறித்து
பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., சட்டத்தை திரும்ப
பெறவேண்டும். டில்லியில் போராடும், இடதுசாரி மாணவர்கள், இளைஞர்கள்,
முன்னாள் முதல்வர்கள், எம்.பி.,க்கள் மீதான அடக்கு முறையை நிறுத்த
வேண்டும். 13 கோடி மக்களின் ஓட்டுகளை பறித்த தேர்தல் ஆணையர்
ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
நாட்டின் ஒட்டுமொத்த
பொது துறைகளையும் பன்னாட்டு, உள்நாட்டு தனியாருக்கு
விற்கக்கூடாது. 90 சதவீத முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை
பறிக்கக்கூடாது. விவசாய தொழிலாளர்கள் தொழிலை நசுக்காதே என்பன
உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
