/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சிப்காட்' அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் உண்ணாவிரதம்
/
'சிப்காட்' அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் உண்ணாவிரதம்
'சிப்காட்' அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் உண்ணாவிரதம்
'சிப்காட்' அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் உண்ணாவிரதம்
ADDED : ஆக 17, 2024 02:15 AM
மோகனுார்:மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், ஆண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், தமிழக அரசு சார்பில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சியினரும் இணைந்து, 'சிப்காட் எதிர்ப்பு இயக்கம்' ஏற்படுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, 14 நள்ளிரவு, 12:00 முதல், ஏராளமான விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம், 15 நள்ளிரவு, 12:00 மணி வரை, 24:00 மணி நேரம் நீடித்தது.
இதுகுறித்து, விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: மோகனுார் தாலுகாவிற்கு உட்பட்ட வளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், சிப்காட் அமைக்க வருவாய்த்துறையினால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தில் ஏரி, குளம், குட்டைகள், தடுப்பணைகள், குடியிருப்புகள், பள்ளிகள் மறைக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களை தரிசு என்று குறிப்பிட்டுள்ளனர். அதனால், 'சிப்காட்' அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி, 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம். இத்திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

