/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் கள்ளுக்கான தடையை நீக்கக்கோரி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்
/
நாமக்கல்லில் கள்ளுக்கான தடையை நீக்கக்கோரி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்
நாமக்கல்லில் கள்ளுக்கான தடையை நீக்கக்கோரி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்
நாமக்கல்லில் கள்ளுக்கான தடையை நீக்கக்கோரி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்
ADDED : செப் 01, 2024 03:44 AM
நாமக்கல்: தமிழகத்தில், கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பெண்கள் உள்பட, 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள தென்னை, பனை மரத்தில் இருந்து கள்ளு கட்டி விற்பனை செய்யவும், கள்ளுக்-குண்டான தடையை நீக்கி, உடனடியாக கள்ளுக் கடைகளை தமி-ழகம் முழுவதும் திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். தவ-றும்பட்சத்தில் ஆக., 31ல், தமிழக முழுவதும் உள்ள அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடைகளை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி, பூட்டு போட்டு போராட்டம் நடத்-துவோம் என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்தது.அதன்படி, நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நேற்று நடந்தது. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கி, தமிழகம் முழுவதும் தென்னை, பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்-பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என, கோஷம் எழுப்-பினர். தொடர்ந்து, டாஸ்மாக் கடையை பூட்டு போட முயன்-றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்-களை தடுத்து நிறுத்தி கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
'விவசாயிகள் டாஸ்மாக் கடையை மூடி பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்' என, அறிவித்திருந்த நிலையில், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்-னெச்சரிக்கை நடவடிக்கையாக திறக்கவில்லை என்பது குறிப்பி-டத்தக்கது.