ADDED : செப் 17, 2024 01:31 AM
இலவச சைக்கிள் வழங்கல்
நாமக்கல், செப். 17-
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் சீனிவாசராகவன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், 143 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசியதாவது:தமிழக அரசு, கல்விக்காக ஏராளமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பணியாற்றி வருகிறது. மாணவ, மாணவியர் மேம்பாட்டிற்காக, 'தமிழ் புதல்வன்', 'நான் முதல்வன்', 'புதுமைப்பெண்' போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை பயன்படுத்தி, மாணவர்கள் நன்றாக படித்து, பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்து, வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தி.மு.க., நகர செயலாளர் ராணா ஆனந்த், பி.டி.ஏ., தலைவர் நாகரத்தினம், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

