/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புரட்டாசி விரதம் எதிரொலி கறிக்கடைகளில் திரண்ட மக்கள்
/
புரட்டாசி விரதம் எதிரொலி கறிக்கடைகளில் திரண்ட மக்கள்
புரட்டாசி விரதம் எதிரொலி கறிக்கடைகளில் திரண்ட மக்கள்
புரட்டாசி விரதம் எதிரொலி கறிக்கடைகளில் திரண்ட மக்கள்
ADDED : செப் 16, 2024 02:47 AM
ராசிபுரம்: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெரும்பாலான ஹிந்துக்கள் வீடுகளில் அசைவம் சமைப்பதை தவிர்ப்பர். மாதம் முழுதும் பெருமாளை கொண்டாடினாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்வர். இதற்காக அருகில் உள்ள பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று விரதம் முடிப்பார்கள்.
புரட்டாசி மாதம் நாளை தொடங்குகிறது. நாளை முதல் ஒரு மாதத்திற்கு சைவம் என்பதால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, வழக்கத்தை விட கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆடு, கோழி, மீன் கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. நாமகிரிப்பேட்டை - அரியாகவுண்டம்பட்டி ரோட்டில் தான் அதிக கறிக்கடைகள் உள்ளன. நேற்று காலை, 10:00 மணி வரை இந்த சாலையில் வாகன நெரிசல் இருந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராசிபுரத்தில், காட்டூர் ரோடு, பட்டணம் ரோடு, மார்க்கெட் பகுதிகளில் இருந்த கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. மாலை வரை இந்த கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. வழக்கத்தை விட இரண்டு மடங்கு வியாபாரம் ஆனதாக கறிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.