/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.10.79 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்
/
ரூ.10.79 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்
ADDED : செப் 05, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் குடியிருப்பு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய, சுத்திகரிப்பு நிலையம் பெரியார் நகர் பகு-தியில், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், 10.79 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணி துவக்க விழா, நேற்று நகராட்சி தலைவர் செல்வராஜ் தலை-மையில் நடந்தது.
ஈரோடு எம்.பி., பிரகாஷ், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். துணைத்தலைவர் பாலமுருகன், நகராட்சி கமிஷனர் தாமரை, கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.