/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இடி, மின்னலுடன் மழை மின் சாதனங்கள் பழுது
/
இடி, மின்னலுடன் மழை மின் சாதனங்கள் பழுது
ADDED : ஆக 18, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுாரில், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு திடீ-ரென பலத்த காற்று வீசியது. அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
இரவு, 11:00 மணி வரை மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. அப்-போது பலத்த இடி சத்தத்துடன் மின்னல் தாக்கியது. அப்-போது ராஜா வாய்க்காலின் கரையோரத்தில் இருந்த பனைமரம் இடி தாக்கி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும், சுல்தான்-பேட்டை பகுதியில் உள்ள வீடுகளில், 'டிவி', பிரிட்ஜ், பேன் உள்-ளிட்ட, 20க்கும் மேற்பட்ட மின் சாதனங்கள் பழுதாகின.

