/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் ஸ்டேஷனில் கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை
/
பள்ளிப்பாளையம் ஸ்டேஷனில் கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை
பள்ளிப்பாளையம் ஸ்டேஷனில் கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை
பள்ளிப்பாளையம் ஸ்டேஷனில் கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை
ADDED : மே 18, 2024 01:38 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் ஸ்டேஷனில், போலீசார் பற்றாக்குறையால், அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை, 10 கி.மீ., சுற்றளவு கொண்டது. தற்போது, 33 போலீசார் பணியில் உள்ளனர். இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. 30 ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே, தற்போதும் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கை இல்லாததால், வழக்கு விசாரணை, நீதிமன்ற பணி, இரவு ரோந்து உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தால், அதுகுறித்து விசாரிக்க காலதாமதம் ஏற்படுகிறது.
சில நாட்களுக்கு முன், ஜீவாசெட் பகுதியில் மது போதையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததை அடுத்து, ஒரு எஸ்.ஐ., மட்டும் சம்பவ இடத்திற்கு சென்று, அடிதடியில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.
எனவே, பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், கூடுதலாக போலீசாரை நியமிக்க, எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

