/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொன்னேரி கைகாட்டி சாலையில் காய்ந்த மரங்களை வெட்ட கோரிக்கை
/
பொன்னேரி கைகாட்டி சாலையில் காய்ந்த மரங்களை வெட்ட கோரிக்கை
பொன்னேரி கைகாட்டி சாலையில் காய்ந்த மரங்களை வெட்ட கோரிக்கை
பொன்னேரி கைகாட்டி சாலையில் காய்ந்த மரங்களை வெட்ட கோரிக்கை
ADDED : மே 02, 2024 11:28 AM
எருமப்பட்டி: பொன்னேரி கைகாட்டியில் இருந்து, எருமப்பட்டிக்கு செல்லும் சாலையில் காய்ந்த புளிய மரங்களை வெட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமக்கல் மெயின் ரோடு, பொன்னேரி கைகாட்டியில் இருந்து, எருமப்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது.
இதனால், கடந்தாண்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்ட நிலையில், தினமும் ஏராளமான பஸ், லாரி, டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சாலையோரம் காய்ந்த புளிய மரங்கள் வெட்டப்படாமல் உள்ளதால், பலத்த காற்று வீசும்போது உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், சாலையில் காய்ந்துள்ள புளிய மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.