/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உண்டியல் பணம் திருடிய வாலிபருக்கு காப்பு
/
உண்டியல் பணம் திருடிய வாலிபருக்கு காப்பு
ADDED : மே 10, 2024 02:26 AM
சேந்தமங்கலம்;சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கோவில்
உண்டியலில் திருடி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டி, பெருமாம்பாளையம், கொண்டமநாய்க்கன்பட்டி ஆகிய கோவில்களில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இது குறித்து, சேந்தமங்கலம் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது, நாமக்கல் செல்லப்பா காலனியை சேர்ந்த கிருஷ்ணகுமார், 24, என்ற இளைஞரிடம் நடத்திய விசாரணையில் கோவில்களில் உண்டியலை உடைத்து திருடியது தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார், இவருடன் திருட்டில் ஈடுபட்ட முத்துக்காப்பட்டியை சேர்ந்த தினகரன், கொண்டம நாய்க்கன்பட்டியை சேர்ந்த விஜய், அன்பு நகரை சேர்ந்த பாலாஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.